கடன் மறுசீரமைப்பு, பொருளாதார கொள்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிகள் சர்வதேச நாணய நிதியத்தினதும்,உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சில் ஈடுப்படவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாடு நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளனர்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேநேரம், கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் பேச்சில் ஈடுபடவுள்ளனர்.
முன்னெடுப்படும் பேச்சுக்கள் தொடர்பான சகல விடயங்களும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். இந்த வருடத்துக்குள் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
Discussion about this post