கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதுடன், அதற்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையே காரணம் என்று கூறிய அதிபர் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை உடனே மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
பதுளையைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அதிபர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
அதிபரிடம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்தபோது, தற்போது வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாதுள்ளது என்றும் பொருளாதார நெருக்கடியால் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டேன் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post