சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய்வதற்காக உயர் நீதிமன்றத்தால் சில உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ஆகப் பேணும் தீர்மானம் எடுக்கப்பட்டமை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கணக்காய்வாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியை பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலருக்கு வழங்கப்பட்ட முறிகள் என்பவை தொடர்பாகவும் கணக்காய்வாளர் நாயகத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோரின் உத்தரவுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்போதைய அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருடனான தொடர்பாடல் அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாணய சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post