60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற சுற்றறிக்கையின் காரணமாக 300 நிபுணர்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் உபுல் கலப்பட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தநிலைமையால் நாட்டில் சுகாதார சீர்கேடு ஏற்படவுள்ளது. கொழும்புக்கு வெளியே உள்ள பல மருத்துவமனைகள் மூடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த உரையாற்றிய உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, சுகாதார சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் மருத்துவர்கள் தொடர்பில் மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்தார்.
Discussion about this post