கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டு ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணம் கந்தர் மடம் நீராவியடி 395 வது மைல் கட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடமையில் இடம் பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேதுறை நோக்கி வந்த இரவு தபால் ரயிலுடன் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post