சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளன.
இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.
பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கோதுமை மாவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்படும் என்று நேற்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியுள்ளன என்றும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
Discussion about this post