சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும், ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைகளை விதிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பாக பிரிட்டன் அரசாங்கம் ஆராய்கின்றது என்று அறிய முடிகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை பிரிட்டன் அரசாங்கம் மிக உன்னிப்பாக மதிப்பாய்வு செய்து வருகின்றது
‘தடைவிதிப்பு’ உள்ளடங்கலாகத் தம்வசமுள்ள இராஜதந்திர உத்திகளை எவ்வாறு பிரயோகிக்கமுடியும் என்பது தொடர்பாக தீவிரமாக ஆராயப்படுகின்றது என்று அமைச்சர் ஜெஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் நிதிச் செயலாளராகப் பதவிவகித்த நோர்மன், பிரிட்டன் பிரதமராக எலிசபெத் ட்ரஸ் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து வெற்றிடமான வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் பதவிக்குக் கடந்த செப்ரெம்பர் 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
Discussion about this post