பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸாரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார்.
அதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாத நீதிபதி சவுத்ரி முன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் இம்ரான் கான்.
ஆனாலும், இம்ரான் கானின் அவதூறு பேச்சுக்கு நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்ரான் கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு அமளியில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post