கல்வி அமைச்சு அனுமதிக்கும் பாடசாலை கட்டணங்களைத் தவிர்த்து சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு உற்சவங்களுக்கு மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க பாடசாலை நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.
பாடசாலைகளில் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதை தடை செய்து 2015/5 சுற்று நிருபம் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர், பெற்றோர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அவர்கள் மீது தேவையற்ற வகையில் பணம் வசூலிப்பதை நிறுத்துவதற்கு குறிப்பாக அதிபர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் முறையற்ற வகையில் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் கடந்த சில தினங்களில் அதிகளவு இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Discussion about this post