இந்தாண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியல் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதில் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளும் அழிக்கப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய பெண்கள் சக்தி தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தைக் கூறுவதற்காக நான் சிஐடியால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவித்த அவர், ஆனால் இந்த புரட்சி நிச்சயமாக ஒக்டோபர் இறுதியில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சுனாமி தாக்கும் போது தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என்று தெரிவித்த அவர், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த முறை தெருவில் இறங்கினர், ஆனால் இந்த முறை ஏழைகள்தான் எழுச்சியை வழிநடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post