அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளமே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார் என்று மேல் மாகாண சபை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள வட்டகல, அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களைக் குறைத்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொலிஸார் அசுத்த நீரைக் கொண்டு அடிக்கின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Discussion about this post