இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடன் வழங்குநர்களுடனான, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மானிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் கூறினார்.
ஆயினும் சர்வதேச நாணய நிதியத்துடன், பணியாளர் மட்ட உடன்பாட்டின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்களுக்கு, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என இலங்கை அரசாங்கம் ஊகிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் நிக்கி ஏஷியா இணையத்தளத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கைக்கான கடன் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் எடுப்பதால், நிதியை வழங்கும் காலக்கெடுவை எதிர்வுகூறுவது மிகவும் கடினம். சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும்.
அப்போதுதான், எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து இலங்கை விரைவாக வெளியேற முடியும் என அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post