வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் முகமாக விழிப்புணர்வு நடைபயணம் இன்று யாழ். போதனா மருத்துவமனை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடைபவனி நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனை முன்றிலில் ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ்.பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக கச்சேரியை வந்தடைந்து யாழ்.மாவட்ட செயலரிடம் மருத்துவமனை சமூகத்தினரால் மனு கையளிக்கப்பட்டது.
Discussion about this post