கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பௌத்த பிக்குகளும், நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர எரங்க குணசேகரவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று பிற்பகல் சோஷலிச இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post