நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில் முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய இரண்டுக்கும் அமைவாக வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போசாக்கு மாதம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது-
இந்த முறை தேசிய போசாக்கு மாதத்தின் தொனிப்பொருள் ´குறைந்த செலவில் போசாக்கை பாதுகாப்போம். தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம். முன் மாதிரியாக செயற்படுவோம். உற்பத்தியை மேற்கொள்வோம் பகிர்ந்து கொள்வோம்´ என்பதாகும்.
விசேடமாக தற்பொழுது பிள்ளைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
5 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது தொடர்பாக அனைத்து மாவட்டத்திலும் உள்ள சுகாதார மருத்துவ அலுவலக ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தமது பிரதேசத்தில் எடையை மதிப்பீடு செய்யும் நிலையத்திற்கு அல்லது குடும்ப சுகாதார சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி எடையை அளவீடு செய்யும் பிரதேசத்தில் சம்பந்தப்பட்ட நிலையத்துக்கு தமது பிள்ளைகளை அழைத்து சென்று வளர்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கு பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும்.- என்றார்.
Discussion about this post