மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கேவில், முள்ளியானைச் சேர்ந்த ம.மாதுரன் (வயது-37) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கேவில் பகுதியில் பயணித்த இவர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் தலையில் படுகாயமடைந்த இவர், மருதங்கேணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆயினும் நேற்றுக்காலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post