சிறிலங்காவின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான “லசார்ட்” பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளது.
அதன்தொடர்ச்சியாக சிறிலங்காவின் சுமார் 85 பில்லியன் டொலர் முதல் 100 பில்லியன் டொலர் வரையான கடன்களைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்காக சிறிலங்காவால் சர்வதேச சட்டத்தரணி கிளிஃபர்ட் சான்ஸூன் இணைந்த “லசார்ட்” ஆலோசனைக் குழு கடந்த மே மாதம் பணிக்கு அமர்த்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களின் தொடர்ச்சியாக சுமார் 2.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடன் திட்டத்தைச் செயற்படுத்த சிறிலங்காவின் மூன்று பிரதான கடன் கொடுநர்களான சீனா, இந்தியா, ஜபப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் மறுசீரமைப்பு அவசியம்.
தற்போது “லாசார்ட்” ஆலோசனைக் குழு இந்த நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்களின் அடிப்படையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.
சிறிலங்காவின் கடன்களில் சுமார் 13 பில்லியன் டொலரை சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன. அதேநேரம் சிறிலங்காவின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக சீனா உள்ளது.
Discussion about this post