மக்கள் வங்கியின் 61 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் வங்கி யாழ்.பிராந்தியமும் இலங்கை வங்கி ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம், மக்கள் வங்கியின் கொடிகாமக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், யாழ்.போதனா மருத்துவமனையின் குருதி வங்கி மருத்துவ அதிகாரி ம.பிரதீபன் , குருதி வங்கி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ரி.ரவினதாஸ், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள், மக்கள் வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு நினைவுப் பரிசாக மக்கள் வங்கியின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி வழங்கப்பட்டது.
Discussion about this post