2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 105 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று (02) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பிரகாரம், 115 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 43 எம்.பிக்கள் நடுநிலை வகித்திருந்தனர்.
இதேவேளை, இன்றைய வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விலகியிருந்தது.
மேலும், நேற்று முன்தினம், எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 எம்.பிக்களும் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post