இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விசேட உரையொன்றை வழங்கவுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு (திருத்த) சட்ட வரைபை எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக (வரவு செலவுத் திட்ட உரை) சமர்ப்பிக்க உள்ளார்.
Discussion about this post