போராட்டக்காரர்கள் காரணமின்றி கைதுசெய்யப்படுதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல் ஆகியவை கவலையளிக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த மே 9ஆம் திகதி முதல் ஜூலை 9ஆம் திகதி வரை அரசுக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தனித்திருக்கும் வேளை கைதுசெய்யப்படுகின்றனர்.
அத்துடன் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அநாகரிகமான செயற்பாடு. இதற்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாடு தற்போது மெதுவாக வழமையான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு போராட்டக்காரர்கள் மீதான கைது நடவடிக்கை மூலம் நாட்டை மீண்டும் பின்நோக்கி செல்ல வழிவகுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post