கோத்தாய ராஜபக்ச தன்னிடம் ஆலோசனை பெற்றிருந்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றே கூறியிருப்பேன் என்று முன்னாள் பிரதமரும், கோத்தாய ராஜபக்சவின் மூத்த சகோதரருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச தான் செய்துமுடித்திருக்க வேண்டிய விடயத்தை செய்து முடித்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச ஆனால் அவர் அரசியல்வாதியில்லை என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தினார் என்று கூறிய மஹிந்த ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்ச. தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் அவ்வாறு செய்திருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post