நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு தற்போது வழங்கியுள்ளது எனவும், இதன்படி ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ம் திகதி 4 வருட கடுங்காவல் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான பிரமாண பத்திரத்தில் கடந்த 13ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Discussion about this post