நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அமர்த்தும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில், ‘பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு , ஆயுதந்தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக இந்த மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post