ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டத்தின் ஆட்சி படிப்படியாக சீர்குலைந்து, நீதித்துறையில் அரசியல் தலைவர்களின் தலையீடானது, நீதியை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தவறுகள் சரி செய்யப்படுவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பேராயர், தவறான கொள்கைகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும், நிதி நெருக்கடி, கடுமையாக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்களின் தவறான திட்டங்களால் நாட்டில் பெரும் கடன் பிரச்சினை ஏற்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாதுள்ள நிலையில், தேசிய வருமானமும், உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதால் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை சிறிலங்கா மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post