நல்லூர் மந்திரிமனையின் முன் கூரைப்பகுதி கீழே விழும் நிலையில் காணப்படுகின்றது. அதைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் சின்னமாகக் கருதப்படும் நல்லூர் மந்திரிமனை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், அந்தக் காணி தனியார் காணியாகவே உள்ளது.
மந்திரிமனையைப் பாதுகாப்பதற்குப் பலர் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளபோதும், தனியார் காணி என்பதால் சீரமைப்பு நடவடிக்கைகள் தாமதிக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில், யாழ்ப்பாண இராசாதானியின் சின்னங்களுள் முக்கியமானதாகக் கருதப்படும் நல்லூர் மந்திரிமனையை சீரமைத்துப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post