பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொதுமன்னிப்பு காலத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கில் குறித்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post