சிறிலங்காவில் சீனாவின் ஆய்வுக் கப்பலும், பாகிஸ்தானின் போர்க் கப்பலும் நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியா தனது கண்காணிப்புக்களை அதிரித்துள்ளது.
பாக்குநீரினைப் பகுதியில் இந்தியக் கடற்படையின் அதி நவீன கப்பல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பல் வருகைக்கு சிறிலங்கா அனுமதி வழங்கியிருந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் ஒரு வாரத்துக்கு நங்கூரமிட்டு இருக்கும்.
சீன கப்பல் 750 கிலோ மீற்றர் தூரம் வரையில் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகின்றது.
அதைத் தடுக்கும் வகையில் பாக்கு நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post