யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பூப்புனித விழா ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றபோதும், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.
புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வந்தவர்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தமது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை இன்று நடத்தியிருந்தனர்.

பூப்புனித நீராட்டு விழாவில் யானை, குதிரை, நடன நிகழ்வுகளுடன் மிக ஆடம்பரமாக விழா நாயகி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். இவற்றைப் பெரும் திரளான மக்கள் கூடிப் பார்வையிட்டனர்.
சிறிலங்காவில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான குடும்பங்கள் இருவேளை உணவுடன் நாள்களைக் கடத்தும் நிலைமையே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருவோர் பெரும் நிதிச் செலவில் ஆடம்பர கேளிக்கை நிகழ்வுகள் நடத்துவது முரணான செயற்பாடு என்ற விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.


Discussion about this post