நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவிததுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் நேற்றுமுன்தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post