புலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காகவே, சில புலம் பெயர் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முதற்கட்டமாகச் சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், தடைப்பட்டியலில் உள்ள ஏனைய அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகளை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது என்றும் கூறினார்.
இந்த விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
Discussion about this post