5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை மிரட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை அச்சுறுத்தி திருப்பி அழைப்பதற்காகவே அவர் மகனின் கழுத்தில் கைத்தியை வைத்து மிரட்டி, அதை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டார் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் கொழும்பு, குளியாப்பிட்டியவில் நடந்துள்ளது.
அந்த வீடியோயை மனைவி தன்னை வேலை வாய்ப்புக்கு அனுப்பி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகத்துக்கு அனுப்பியுள்ளார். வேலை வாய்ப்பு முகவரகம் இது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்துப் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தை வைத்து அழுத்தியதால் காயமடைந்துள்ள சிறுவன் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.
Discussion about this post