சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்று தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, சேர விரும்பும் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.
சர்வகட்சி ஆட்சிக்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் எங்களுக்கு வேறு வழியில்லை. சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்.
இது அனைத்துக் கட்சியாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றோம். சர்வகட்சி ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post