நாட்டின் டொலர் பற்றாக்குறை நிலைமை இன்னும் மோசமடையலாம் என்பதால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்திலும் மோசமாக இருக்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் இறக்குமதிக்காக டொலரைத் தக்க வைக்க வேண்டும் என்பதால், அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியில் கண்டிப்பாகக் கட்டுப்பாடு தேவை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் அத்தியாவசியமற்ற பொருள்களின் மூன்று பட்டியல்கள் நிதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. அந்தப் பட்டியலில் 2 ஆயிரத்து 500 பொருள்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post