எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தளர்ந்து வரும் நிலையில், அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கட்டுப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்படி, குறித்த கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களிலும் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
Discussion about this post