அடுத்த வாரம் முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாரத்தின் ஐந்து நாள்களும் காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Discussion about this post