காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய யுவதியின் விசாவை இரத்துச் செய்வதற்கு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானிய யுவதி இந்த மாதம் 15 ஆம் திகதி திகதிக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட விசா அனுமதியில் பிரித்தானிய யுவதி, இலங்கையில் தங்கியிருந்தார் என்றும் அவர் விசா நடைமுறையை மீறிச் செயற்பாட்டுள்ளார் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட களத்தின் சம்பவங்களை அவர் சமூக ஊடகங்கள் வழியாக ஒளிப்பரப்பினார் என்று பிரித்தானிய யுவதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு, கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
Discussion about this post