ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 49 மற்றும் 55 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மொரட்டுவைப் பிரதேசத்தில் இருவரும் இணைந்து வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின்றனா் என்று பொலிஸர்ர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களைக் கொண்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனா் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Discussion about this post