நாடாளுமன்றத்துக்குள் ஒரு சட்டமும், நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச் சொத்துச் சட்டம் செல்லாது என்ற தவறான கருத்து நேற்று வெளியிடப்பட்டது. குற்றவியல் சட்டம் இந்த சபையில் செல்லுப்படியாகாதா என்பதை சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள அதிகாரங்கள் குறித்து நாட்டையே தவறாக வழிநடத்தும் சம்பவமொன்று நேற்று (நேற்றுமுன்தினம்) இடம்பெற்றது.
52 நாள் ஆட்சி கவிழ்ப்பு சதித் திட்ட காலப்பகுதியில் சபையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் வழங்கிய கருத்து குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்
Discussion about this post