நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நாம் நாடாளுமன்றில் பேசி அரசுக்கு உதவி செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சியில் இருந்து அரசுக்கு உதவி செய்ய முடியும். அரசாங்கத்தில் இணைந்து கொண்டுதான் அரசுக்கு உதவ வேண்டும் என்றில்லை என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
Discussion about this post