கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள இரு முன்பள்ளிகள் திடீரெனப் பெயர் மாற்றப்பட்டமைக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மயூரன் முன்பள்ளி மற்றும் பாற்கடல் முன்பள்ளிகளின் பெயர்களே திடீரென வீரமுத்துக்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும், சிங்கள மொழி முதன்மைப்படுத்தப்பட்டு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிராம மக்களுக்கோ அல்லது கிரா மட்டப் பொது அமைப்புகளுக்கோ அறிவிக்காது முன்பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும், அதனால் முன்பள்ளிகளின் செயற்பாடுகள் தற்போது தடைப்பட்டுள்ளன என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் கிராம அலுவலருக்கோ, பிரதேச செயலர்களுக்கோ, கிராம பொது அமைப்புகளுக்கோ எதுவும் தெரியாத நிலையில், முன்பள்ளிக் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து தமது பிள்ளைகளைப் பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர். இந்த முன்பள்ளிகளின் முன்னைய பெயர்களில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post