ஒரு நாட்டால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் பெறுவதால் என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த உ தாரணம் இலங்கை என்று சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோகிவா தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு தாங்க முடியாத கடனை பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் அரசியல் நெருக்கடியும் இலங்கை ஊடாக தெளிவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் ஜி- 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு நடைபெற்ற சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பாட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post