2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 09, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
22 ஆவது அரசமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post