எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
புத்தளம் – மணற்குன்று பகுதியை சேர்ந்த 63 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்றுமுன்தினம் முதல் தனது லொறியில் காத்திருந்துள்ளார்.
நேற்ற அதிகாலை 12.30 அளவில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அங்கிருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆயினும் அந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post