திருத்தியமைக்கப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01) நடைபெற்றது.
இதன்போது திருத்தியமைக்கப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
இதற்கு முன்னரும் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு திருத்தப்பட்ட சட்டமூலமே இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post