முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர முடியும் என்றும், அவர் இலங்கை திரும்பினால் அரசாஙகம் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் நேற்றுக் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ச இந்த நாட்டின் குடிமகன் என்று தெரிவித்த சாகல, முன்னாள் ஜனாதிபதியான அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு என்று தெரிவித்தார்.
அவர் நாடு திரும்பினால் முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகளும், பாதுகாப்பும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாபதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோத்தாபய ராஜபக்ச இப்போது நாடு திரும்பினால், நாட்டின் அமைதிக்குப் பாதிப்பு என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post