சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற 50 பேர் வென்னப்புவ, கொலின்ஜாடிய பகுதியில் வைத்து இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் மற்றும் வானில் கடற்கரைப் பகுதிக்கு சந்தேகநபர்கள் னெ்று கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை பொலிஸார் அவர்களை இடைமறித்துக் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Discussion about this post