இலங்கையில் கொவிட்-19 வைரஸின் மற்றொரு அலையைத் தடுக்க அதிகபட்ச முயற்சி எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது கொவிட் அலைகளை நாங்கள் எதிர்கொண்டது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார் .
நாடு தற்போது இருக்கும் நிலையில் இனி பொது முடக்கத்திற்கு செல்ல முடியாது என்று கூறினார். எனவே, இதுபோன்ற அலைகள் எழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் பதிவாகும் கொவிட்-கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. . கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட சோதனை வசதிகளுடன், அதிகபட்சமாக 150 கொவிட் பொசிட்டிவ் நோயாளிகள் உறுதி செய்யப்படுகின்றனர் . இறப்புகளின் எண்ணிக்கையிலும் அசாதாரண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த புதிய வகையானது, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 12 பேருக்கு பரவும் திறனைக் கொண்டுள்ளது.
இது முந்தைய டெல்டா வகைகள் மற்றும் சீனாவில் காணப்படும் மாறுபாடுகளை விட அதிகமாகும் என டொக்டர் அலுத்கே கூறியுள்ளார். மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தடுப்பூசியின் திறன் குறைந்து வருகிறது. எனவே, மக்கள் விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Discussion about this post