நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடல் போராட்டம் தொடரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்களை கைது செய்யும் முனைப்பில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட 150 இளைஞர்களின் பட்டியலை பொலிஸார் தயாரித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த செயற்பாட்டாளர்களை கைது செய்து விசாரணை நடத்துவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தவுள்ளதாக குறித்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
Discussion about this post