நெதர்லாந்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 2,973 போதை மாத்திரைகளை இலங்கை சுங்க மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் நெதர்லாந்தில் இருந்து மசாஜ் இயந்திரமாக கொண்டு வரப்பட்ட இந்த பொதி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இயந்திரத்தை திறந்து பார்த்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் 29,730,000 ரூபா என சுங்க ஊடகம் தெரிவித்துள்ளது. பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா மேலும் தெரிவித்தார்.
Discussion about this post